செய்தியாளர்களிடம் பேசிய, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பிரபல திரைப்பட நடிகர் திரு சூரி அவர்கள், விருமன் திரைப்பட விழாவிலே பேசுகின்ற பொழுது…. கோயில் கட்டுவதை விட இது மாதிரியான கல்வி அறிவை பரப்புவது நல்லது. இது ஏற்கனவே பாரதியார் பாடிய கருத்து தான். பரவலாக இந்த திரைப்பட பாடல் வெளியீட்டு விழா, திரைப்பட துவக்க விழா, இதுல எல்லாம் வந்து இப்படி பேசுகிற பொழுது….
ஏற்கனவே ஜோதிகா மேடம் என்ன பேசிட்டாங்க ? அப்படின்னா நீங்க வந்து தஞ்சாவூர் கோவில பராமரிக்கிறத விட, மருத்துவமனையை பராமரிக்கலாம்… இப்படி எல்லாம் வந்து பேசி இருக்காங்க. அதனால இதெல்லாம் ஒரு சர்ச்சையான கருத்தாக உருவானது. பயில்வான் ரங்கநாதன் போன்றவர்கள்… ஏன் இதை பற்றி பேசினீர்கள் ? என்று விமர்சனம் வந்தது. உடனடியாக நம்முடைய திரைப்பட நடிகர் சூரி அவர்கள், பக்குவமாக நான் வந்து கடவுள் நம்பிக்கை உள்ளவன்.
குறிப்பாக மீனாட்சி பக்தி. அம்மன் மீது மிகப்பெரிய பக்தி. அம்மன் பெயரில் நான் எல்லாம் செய்து கொண்டிருக்கின்றேன். கடவுள் நம்பிக்கை இழிவு படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல என இதை வந்து தெளிவுபடுத்தி இருக்கிறார். நான் வந்து திரைப்பட நடிகர் சூர்யா அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அவர் வந்து மற்றவர்களுடைய கருத்துக்கும் மதிப்பு கொடுத்து, ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்ளாமல், அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.