Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 2 மடங்காக அதிகரித்த குற்றங்கள்…. 120 சதவீதமாக உயர்ந்த அவசரகால எண்களின் அழைப்பு…. அறிக்கை வெளியிட்ட ஐ.நா….!!

இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் பதிவான குடும்ப வன்முறை குற்றங்கள் கடந்த 2020ஆம் ஆண்டில் 2 மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா பெண்களின் மீது நடத்தப்படும் குற்றங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது உலகளவிலுள்ள பெண்களில் சுமார் 736 மில்லியன் பெண்கள் ஒரு தடவையாவது பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதோடு மட்டுமின்றி குடும்ப வன்முறையினால் அழைக்கப்படும் அவசரகால உதவி எண்கள் 24 மணி நேரத்தில் 120 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அவசரகால உதவி எண்களின் தரவுகளின்படி தெரியவந்துள்ளது.

அதோடுமட்டுமின்றி இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் பதிவான குடும்ப வன்முறை குற்றங்கள் 2020ஆம் ஆண்டில் இரு மடங்காக பதிவாகியுள்ளது.

Categories

Tech |