தேனி மாவட்டம் பெரிய குளம் வடகரை பகுதியில் அக்கீம் (50) என்பவர் வசித்து வருகிறார். இவர் 10-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கி வந்து தான் வசிக்கும் பள்ளிவாசல் தெருவில் அடுக்கி வைத்துள்ளார். அதன்பின் அதிலிருந்த ஒரு பாட்டில் மதுவை அக்கீம் குடித்துவிட்டு அங்கிருந்த ஒரு படிக்கட்டில் படித்துக் கொண்டு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த முத்துக்குமார் என்பவரை அக்கீம் திடீரென டீ ஆத்தக்கூடிய ஈயக்கப்பினை எடுத்து தாக்கியுள்ளார். இதில் முத்துக்குமாரின் மண்டை உடைந்து அவருக்கு பலத்த காயம் ஏற்படவே ஆத்திரத்தில் முத்துக்குமார் அக்கீமை தாக்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சண்டையை விலகியதோடு காவல்துறையினருக்கும் காவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துக்குமாரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அக்கீமை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடிக்கடி மது குடித்துவிட்டு அக்கீம் தகராறு செய்வதால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.