பிரபல நடிகர் மாதவன் நடிக்கும் அடுத்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 2019ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார். இவரின் எதார்த்த நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து மஞ்சு வாரியர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் பாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார். அதன்படி கல்பேஷ் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் “அமெரிக்கி பண்டிட்” என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு போபாலில் நடைபெற்று வருகிறது.