அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ்நாட்டுகுறிச்சி கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோடங்கிபட்டி பஞ்சு தொழிற்சாலையில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் அதிகமாக மது குடித்துவிட்டு முத்துலாபுரம் ஆற்றுப்பகுதியில் சுயநினைவின்றி கிடப்பதாக அந்த பகுதியில் சென்று வந்தவர்கள் மாரியப்பன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு விரைந்து சென்று சுயநினைவின்றி கிடந்த மாரியப்பனை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு மாரியப்பனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாரியப்பன் அளவுக்கதிகமாக மது குடித்ததால் இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.