சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரையூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையில் சட்டவிரோதமாக மது விற்றுக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சுந்தரத்திடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சுந்தரம் மது பாட்டில் விற்றது தெரியவந்துள்ளது.
அதன்பின் காவல்துறையினர் சுந்தரத்தை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதைப்போன்று இலுப்பூர் பகுதியில் வசிக்கும் வேல்முருகன், பஷீர்அகமது ஆகிய இருவரும் ஒரு டீக்கடையில் வைத்து சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த இலுப்பூர் காவல் துறையினர் வேல்முருகன், பஷீர்அகமது ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.