சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 15 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரம்மதேசம், பெரணமல்லூர், தூசி, அனக்காவூர், செய்யாறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 15 பேர் மீது வழக்கு பதிவு செய்ததோடு அவர்களிடமிருந்த 74 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.