Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. 44 பேர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மது, புகையிலை பொருட்களை விற்ற 44 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் மது, போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புகையிலை பொருட்கள் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்ட 44 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 35 பேரையும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 196 புகையிலை பாக்கெட்டுகள், 345 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.2150 ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |