Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகலாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மானூர் பகுதியில் வசிக்கும் தங்கமணி என்பதும் அவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தங்கமணியை கைது செய்து அவரிடம் இருந்த 30 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று தெற்கு இலந்தைகுளம் பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மானூர் பகுதியில் வசிக்கும் செந்தூர்பாண்டி என்பதும், அவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் செந்தூர்பாண்டியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 27 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |