சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 26 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 26 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 749 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.