சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் கோபாலசமுத்திரம் பகுதியில் வசிக்கும் வள்ளிநாயகம் மற்றும் முனீஸ்வரன் என்பதும், மேலும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.