சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெட்டிக் கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் தட்டார்மடம் மெயின் பஜாரில் செல்வன் என்பவரது பெட்டி கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த கடையில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தட்டார்மடம் காவல்துறையினர் செல்வனை கைது செய்ததோடு அவர் கடையில் பதுக்கி வைத்திருந்த 2 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.