சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செட்டியாபத்து உடங்காடு பகுதியில் குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் ஆண்டிவிளை பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பதும் இவர் செட்டியாபத்து அருகில் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.