மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் அரசு அனுமதியின்றி மதுபானங்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.