மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆறுமுகநேரி-திருச்செந்தூர் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கீழ சண்முகபுரம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர் அரசு முத்திரையுடன் கூடிய மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்ததோடு அவரிடமிருந்த 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.