Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அனைத்து இடங்களிலும் சோதனை….கையும் களவுமாக சிக்கிய நபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அடிக்கடி சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்று வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறை ஆய்வாளர் மணிவண்ணன் சட்டத்தை மீறி மது பாட்டில்கள் விற்பனை செய்வோர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 47 நபர்களை கையும் களவுமாக பிடித்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 314 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |