சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆடுதுறை பகுதியில் பரமசிவம் என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் பரமசிவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 110 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.