சட்ட விரோதமாக மது விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நெல்லை பேட்டை நரசிங்கநல்லூர் ரயில்வே கேட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மானூர் பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் சுரேஷை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் மது விற்று கொண்டிருந்த ரகுமான் பேட்ரை பகுதியில் வசிக்கும் குலாம் மைதீன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 20 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.