Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய 32 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மது விற்ற 32 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின்படி காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் காவல்துறையினர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து  208 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |