மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திட்டங்குளம் கிராம பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சட்டவிரோதமாக முத்து நகர் பகுதியில் மது விற்று கொண்டிருந்த அன்பரசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 330 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.