சட்டவிரோதமாக மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணாபுரம் விலக்குப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் ராஜமன்யபுரம் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜெயக்குமாரை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த 11 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.