மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள மதுவிலக்கு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் சரக்கு ஆட்டோவில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சரக்கு ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் உடன்குடி பகுதியில் வசிக்கும் பாக்கியராஜ் மற்றும் மகபூப் பாஷா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் 2 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மது விலக்கு காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த 960 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.