Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு…. விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள்…. மதுபாட்டில்கள் விற்பனை பாதிப்பு….!!

கொரோனா பாதிப்பைக் குறைப்பதற்காக புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணவேணி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் மதுபானக் கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மதுபான கடை ஊழியர்கள் வழக்கத்தை விட குறைவாகவே மதுபாட்டில்கள் விற்பனையாகியுள்ளது என தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊழியர்கள் கூறும்போது ஒரு நாளுக்கு 4 கோடி வரை விற்பனையாகும் மதுபாட்டில்கள் தற்போது 30% ஆக குறைந்துள்ளது என கூறியுள்ளனர்.

Categories

Tech |