சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விராலிமலை பகுதியில் வசிக்கும் அண்ணாதுரை, மோகன் ஆகியோர் பெட்டி கடையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 25 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.