Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சப்ளை செய்வதற்காக சென்ற லாரி…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. கடலூரில் பரபரப்பு….!!

மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

மதுபான கடைகளுக்கு தேவையான மது பாட்டில்களை சப்ளை செய்வதற்காக கடலூர் டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஸ்ரீமுஷ்ணம் நோக்கிப் புறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் இருக்கும் மதுபான கடைகளுக்கு தேவையான மதுபாட்டில்களை இறக்கி வைத்துவிட்டு அருகாமையில் இருக்கும் குணமங்கலத்தில் உள்ள மதுபான கடைக்கு லாரி புறப்பட்டு சென்று இருக்கிறது. அப்போது அக்ரஹாரம் அருகாமையில் சென்று கொண்டிருந்த நிலையில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையோரமாக லாரியை ஓட்டுனர் இயக்கியுள்ளார்.

அந்நேரம் பாரம் தாங்க முடியாமல் எதிர்பாராவிதமாக லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 20 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களில் ஒரு சில மதுபாட்டில்கள் மட்டுமே சேதமடைந்துள்ளது. இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் இது தொடர்பாக தகவல் அறிந்த டாஸ்மாக் மண்டல மேலாளர் ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய காரில் வைத்திருந்த மது பாட்டில்கள் பெட்டிகளை வேறு ஒரு வாகனத்தில் மாற்றிக் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Categories

Tech |