மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகலாபுரம் பகுதியில் கடற்கரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுரேஷ் சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சுரேஷ் நாகலாபுரம் பேருந்து நிலையம் அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை அறிந்த சுரேஷின் குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து சுரேஷ் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சங்கரலிங்கபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.