வங்கிகளுக்குள் நுழையும் முன் முகக்கவசத்தை கழற்ற வேண்டும் என மத்திய பிரேதச அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5வது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா குறைந்தபாடில்லை. தற்போதுதான் அதிகமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட சுய கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் மட்டும்தான் கொரோனா நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது உலக சுகாதார நிறுவனம் முதல் உள்ளூர் சுகாதார துறை வரை அனைவரும் கொடுக்கக்கூடிய ஆலோசனையாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் மத்திய பிரதேச அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வங்கிகள், நகை வாங்கும் கடைகள், நகை கடன் வாங்கிச் செல்லும் இடங்கள் உள்ளிட்ட நிறுவன அலுவலகத்திற்குள் நுழையும் முன் நுழைவு வாயிலில் 30 நிமிடம் முக கவசத்தை கழட்டி சிசிடிவி கேமராவில் முகத்தை பதிய வைத்த பின் உள்ளே நுழைய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக கொள்ளையர்களிடமிருந்து நிதி நிறுவனங்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.