Categories
மாநில செய்திகள்

மடிக்கணினி திட்டம் எப்போது வழங்கப்படும்?…. முன்னாள் அமைச்சர் அதிரடி கேள்வி….!!!

அதிமுக வழங்கிய மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு எப்போது வழக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராக உள்ளது. அதிலும் இளைஞர்கள், மாணவர்களுக்கு திமுக வெளியிட்ட அறிக்கை கானல் நீராக உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. திமுகவில் 163 வது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் 4G,5G மற்றும் 10GB பதிவிறக்கம் செய்ய வசதியுடன் கூடிய இணைதள இணைப்புடன் கைக்கணினி அரசு செலவில் வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் அனைத்து கல்வி நிலையங்களிலும் WIFI வசதி செய்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 505 தேர்தல் வாக்குறுதியில் இதுவும் கானல் நீராக உள்ளது. இதனையடுத்து இளைய சமுதாயத்தினுடைய எதிர்கால கணினி அறிவை, இந்த கணினி யுகத்தை முன்கூட்டியே எதிர்கொள்வதற்காக இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே பள்ளி, கல்லூரி பாலிடெக்னிக் மாணவ செல்வங்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு மடிக்கணினி வழங்குகிற ஒரு மகத்தான திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் 53 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கொரோனா காலத்திலே கூட அந்த மடிக்கணினி உற்பத்தி பல்வேறு சவால்களுக்கு நடுவில் நடைபெற்றது. இன்றைக்கு இரண்டு ஆண்டு காலம் ஏன் வழங்கவில்லை என்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். அதற்கான நிதி ஒதுக்கீடு கூட நடைபெறவில்லை. ஆன்லைனில் தான் இன்றைக்கு அனைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த கணினி யுகத்தில் இளைய சமுதாயத்தை அரசு பள்ளியில் படிக்கிற ஏழை எளிய மாணவர்களுக்கும் மடிக்கணினி தந்து ஒரு வரலாற்று புரட்சி செய்தவர் ஜெயலலிதா. இன்றைக்கும் மாணவர்கள் அம்மா வழங்கிய மடிக்கணினையும் வழங்கவில்லை, திமுக டேப்லெட் திட்டத்தையும் வழங்கவில்லை. மேலும் பள்ளிக்கல்வியை ஊக்குவிக்கும் 14 வகை கல்வி உபகரணத்துடன் இந்த மகத்தான மடிக்கணினி திட்டத்தை அரசு எப்போது நிறைவேற்றும், எப்போது மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் என்று மாணவர்கள் கவலையோடும் கண்ணீரோடும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாண செல்வங்களுக்கு மடிக்கணினி வழங்கி கல்வி அறிவை வளர்ப்பதற்கு இந்த அரசு முன்வருமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.

Categories

Tech |