Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மாடிப்படியில் தவறி விழுந்து….முதியவர் பலியான சோகம் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மாடிப்படியிலிருந்து, முதியவர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .

திருவள்ளூரை அடுத்துள்ள  மணவாள நகர், கே.கே.நகரில் வெங்கடேசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20 ஆம் தேதியன்று, வீட்டில் உள்ள மாடிப்படியில் ஏறிச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதன் பின் அங்கிருந்து அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடிப்படியில் தவறி விழுந்து முதியவர் ஒருவர், உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |