ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேமாக பரவி வருகின்றது. இதுவரை தமிழகத்தில் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 44 பேர் குணமடைந்த நிலையில், 9 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர், “கொரோனாவை விரைவாகக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இன்னும் இந்தியாவிற்கே வரவில்லை. ரேபிட் டெஸ்ட் வராததற்கு காரணங்கள் தெரியவில்லை என்றார்.
மேலும் விரைவில் சென்னையிலும் வாகனங்களுக்கு வண்ண பாஸ்கள் வழங்கப்பட உள்ளன. முகக்கவசம், கையுறை அணிந்து செய்தித்தாளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் இரவில் கலவை சாதங்கள் வழங்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.