Categories
அரசியல்

“Madras Day” ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா….? சில முக்கிய தகவல்கள்…!!

வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி “மெட்ராஸ் டே” கொண்டாடப்பட உள்ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி மதராசபட்டினம் என்பது சென்னை என பெயர் மாற்றப்பட்டது. கடந்த 1688-ஆம் ஆண்டு இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் மதராசபட்டினத்தை முதல் நகராட்சியாக அறிவித்தார். அதன்படி நாட்டின் முதல் நகராட்சி சென்னை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை நகரம் முறைப்படி நிர்மாணிக்கப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 22-ஆம் நாளை மெட்ராஸ் தினமாக கொண்டாட ஆரம்பித்தனர். கடந்த 1969-ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் என்ற பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாடு என அழைக்கப்பட்டது. பின்னர் 1996-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் மெட்ராசுக்கு “சென்னை” என பெயர் சூட்டினார்.

சென்னை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்:

  • இந்தியாவில் வைஃபை யின் பரந்த நெட்வொர்க்கை கொண்ட முதல் நகரம் சென்னை ஆகும்.
  • கடந்த 1688-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட முனிசிபல் கார்ப்பரேஷன் இன்னும் செயலில் உள்ளது. இது இந்தியாவின் மிக பழமையான முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகும்.
  • இந்தியாவின் மிகவும் பழமையான சிறை சென்னை மத்திய சிறை ஆகும்.
  • உலகின் இரண்டாவது பெரிய நீதித்துறை அமைப்பு மெட்ராஸ் உயர் நீதிமன்ற கட்டிடம் ஆகும்.
  • இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ராஸ் பல்கலைக்கழகம் தான் கடந்த 1930-ஆம் ஆண்டு இசையில் இளங்கலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்தியாவில் மிகவும் பழமையான ராயபுரம் ரயில் நிலையம் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
  • இந்தியாவில் மிக பெரிய செயற்கை கடல் துறைமுகம் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் இருக்கும் மிகப்பெரிய துறைமுகம் சென்னையில் இருக்கிறது.
  • சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானம் இந்தியாவின் மிக பழமையான கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும்.
  • சென்னை அண்ணா சாலையில் இருக்கும் “பென்சர் பிளாசா” கடந்த 1863-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் போது கட்டப்பட்ட மிக பழமையான கட்டிடம் ஆகும்.
  • இந்தியாவில் உள்ள சென்னை மட்டுமே முதல் உலக போரின் போது தாக்கப்பட்ட நகரமாகும்.

Categories

Tech |