Categories
சினிமா மாநில செய்திகள்

“தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ரத்து” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் 21-ஆம் தேதி தென்னிந்திய  நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் உறுப்பினர்கள் சிலர் வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை என்று புகாரளித்ததன் அடிப்படையில் மாவட்ட பதிவாளர் தேர்தலை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் பதிவான வாக்குகளை எண்ண கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனிடையே  தபால் தபால் ஓட்டுக்களை போடுவதற்கு அனுமதியளிக்கவில்லை என்பதால் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதையடுத்து உயர் நீதிமன்றம் அதிரடியாக நடிகர் சங்கத்தை நிர்வகிக்க பதிவுத்துறை ஐஜி கீதாவை நியமனம் செய்தது. இதனை எதிர்த்து நடிகர் விஷால், நாசர்,  கார்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது உயர் நீதிமன்றம்.

இந்நிலையில்  சென்னை உயர்நீதிமன்றம் நடிகர்சங்க தேர்தல் செல்லாது என்று தெரிவித்து, ரத்து செய்யப்படுவதாக  தீர்ப்பளித்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையில் மறு தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் நடிகர் சங்கத்தேர்தலை 3 மாதத்திற்குள் உறுப்பினர்கள் பட்டியலை தயாரித்து தேர்தல் நடத்த வேண்டும் எனவும், தேர்தலை நடத்தி முடிக்கும் வரை கீதாவே நடிகர் சங்கத்தை நிர்வகிக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |