மாடு மீது இரு சக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகுடல் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் செல்வராஜ் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. அப்போது அந்த மாட்டின் மீது மோதி இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் செல்வராஜ் படுகாயமடைந்துள்ளார்.
அதன்பின் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்களால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.