மாடு மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள அகரகட்டு கிராமத்தில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லதாவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் லதாவை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அப்போது பாளை மண்டல அலுவலகம் அருகில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது.
இதனால் ஆம்புலன்ஸ் மாடு மீது மோதி கவிழ்ந்தது. இதில் ஆம்புலன்சில் இருந்த நோயாளியான லதா, அவரது தாயார் செல்வி, சகோதரர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதனைப் பார்த்த அருகிலுள்ளவர்கள் அவர்கள் 3 பேரையும் உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது தாயார் மற்றும் சகோதரன் கிருஷ்ணமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.