வீட்டில் மாட்டிற்கு குடிப்பதற்காக வைக்கப்பட்ட தண்ணீரில் மர்மநபர்கள் விஷத்தை கலக்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் காட்டுப்பாளையம் பகுதியில் முருகசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாடுகள் வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் முருகசாமி தனக்கு சொந்தமான 5 மாடுகளை மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அதன்பின் அவர் மாடுகளுக்கு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துள்ளார். அந்த தண்ணீரை குடித்த மாடுகள் இரண்டு மணி நேரம் கழித்து உயிரிழந்துவிட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகசாமி மாடுகள் குடிக்கும் தண்ணீரில் மர்மநபர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் யூரியா மருந்தை கலக்கியுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.