மதுரையை சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன் என்பவர் 28ஆவது முறையாக கரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன். இவர் யாசகம் பெற்று அதில் கிடைக்கும் பணத்தில் ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்து வருகிறார். இதுவரை 27 முறை தலா ரூ.10 ஆயிரத்தை ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர் ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்தார்.
அப்போது அதிகாரிகள் கொரோனா நிவாரண நிதி பெறும் காலம் முடிவடைந்து விட்டதாகத் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் முதல்வர் பொது நிவாரண நிதியாக அளிக்கலாம் என்று தெரிவித்தனர். இதற்கு பூல் பாண்டியன் சம்மதம் தெரிவித்ததை அடுத்து முதல்வர் பொது நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு அதற்குரிய ரசீதை வழங்கினர்.