Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ்…. அதை மட்டும் சொல்ல முடியாது…. மத்திய அரசு கொடுத்த அடுத்த அதிர்ச்சி….!!!!

கடந்த 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜூன் 2018ல் தோப்பூரில் இடம் தேர்வானது. கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கட்டுமானம் இன்னும் தொடங்காததால் இது குறித்து RTI மூலம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மத்திய அரசு, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். ஆனால் கட்டுமானம் தொடங்கும் தேதியை சொல்ல முடியாது என பதில் அளித்துள்ளது.மதுரை எய்ம்ஸ் திட்ட மொத்த மதிப்பீடான 1977.8 கோடி ரூபாயில் 82 சதவீதத்தை ஜப்பான் ஜெய்க்கா நிறுவனமும், மீதியை மத்திய அரசு வழங்கும்.

Categories

Tech |