மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கட்டோஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப்பணிகள் முனைப்புடன் நடைபெற்று வரும் நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கட்டோஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக உள்ளார்.
எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் மத்திய சுகாதாரத்துறையின் இயக்குனர் ஜெனரல் மற்றும் கூடுதல் செயலாளர் தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.எம்.சி மருத்துவக் கல்லூரியின் தலைமை பேராசிரியர் டாக்டர் சண்முகம் சுப்பையா உள்ளிட்டோர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.