மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவராக வி.எம். கட்டோடஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி கடந்த 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் வி.எம். கட்டோஜ் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருந்து வருகிறார்.
அதோடு டாக்டர் சுதாவின் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மத்திய சுகாதாரத்துறை இயக்குனர் ஜெனரல் மற்றும் கூடுதல் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், டாக்டர் சண்முகம் சுப்பையா கேஎம்சி மருத்துவக் கல்லூரியின் தலைமை பேராசிரியர் உள்ளிட்டோர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் உறவினர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.