மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பிச்சைக்காரர் ஒருவர் 3 வது முறையாக ரூ10,000 நிதி என 3 முறை வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஊரடங்கு தொடர்ந்து 5 வது கட்ட நிலையில், அமுலில் உள்ளது. பலர் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என பலர் நிவாரண உதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர், மூன்றாவது முறையாக பிச்சை எடுத்து வந்த பணத்தில் ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.
ஏற்கனவே இரண்டு முறை பிச்சை எடுத்து பத்தாயிரம் நிதி வழங்கிய அவர், இந்த மக்கள் எனக்கு கொடுத்த பணத்தில், உணவில் தான் இதனை நாள் நான் உண்டு உயிர் வாழ்கிறேன். எனவே மக்களுக்கு கடமைபடும் விதமாக இந்த முயற்சியில் நான் ஈடுபட்டு உள்ளேன். மதுரை மாவட்ட ஆட்சியர் என்னை பிற மாவட்டங்களுக்கு செல்ல அனுமதித்தால் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மாவட்டங்களில் பிச்சை எடுத்து அதில் கொரோனா நிதி உதவி அளிக்க தயார் என அவர் ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.