மதுரையில் பார் நடத்த அனுமதி வழங்கியதில் 38 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தனியார் வணிக வளாக உரிமை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மால் என்ற வணிக வளாகத்தில் பார் நடத்த சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சந்திரசேகரன் முன்பணமாக 68 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வணிக வளாகத்தில் பார் நடத்தி வந்த சந்திரசேகருக்கு நஷ்டம் ஏற்பட செலுத்திய முன்பணத்தை வணிக வளாக உரிமையாளர் இளங்கோவிடம் திரும்பக் கேட்டுள்ளார்.
முன்பணத்தை திருப்பி தர இழுத்தடித்த இளங்கோ இருபத்தி நான்கு லட்சத்தை மட்டுமே சந்திரசேகரிடம் கொடுத்துவிட்டு மீதமுள்ள முப்பத்தி எட்டு லட்சத்தை தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து சந்திரசேகர அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மதுரை குற்றப்பிரிவு காவல்துறையினர் உரிமையாளர் மீது பண மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.