மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேருந்தில் மாயமான விடைத்தாள் கட்டு மூன்று மாதம் கழித்து அதே பேருந்தில் இருந்தது சர்ச்சையாகி உள்ளது.
திண்டுக்கல்லியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் விடைத்தாள் கட்டுகள் கடந்த நவம்பர் மாதம் பல்கலைக்கழகத்தில் உள்ள பேருந்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதில் 138 விடைத்தாள்கள் அடங்கிய ஒரு கட்டு மற்றும் மாயம் ஆனது. இதனால் அந்த கல்லூரிக்கான தேர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை. .
இந்த நிலையில்விடைத்தாள் கட்டு மயமான அதே பேருந்தில் இருந்து எடுக்கப்பட்டு நேற்றைய முன்தினம் தேர்வாணைய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
சம்மந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளிடம் துணைவேந்தர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.
அப்போது கவனக்குறைவாக செயல்பட்டதாக பேருந்தின் ஓட்டுநர் தேர்வாணைய அலுவலகத்தில் உதவி பதிவாளர், துணை பதிவாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
இதனிடையே தொடர்பாக விடைத்தாள் மாயமான நிலையில் அவர்கள் 3 பேரும் வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
முறைகேடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இதனடியில் கிடைக்கப்பெற்ற விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.பணிகள் முடிந்ததும் இந்த வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.