மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் 72 வயதான தாயாருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை தமிழக சுகாதாரத் துறை உறுதி செய்தது. இதையடுத்து அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அதைத்தொடர்ந்து, பலியான மூதாட்டியின் உடல் தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது..
இவரது மகன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகின்றார். மூதாட்டி பலியானதை அடுத்து, மதுரையில் கொரோனா தொற்று காரணமாக 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்..
மேலும், அம்மூதாட்டியின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் கொரோனா இருக்கிறதா? என மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 52 பேர் கொரோனா வைரஸ் காரணமாக மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.