குழந்தைகளை ஊரடங்கை கடைபிடிக்க வைக்க கலை இலக்கிய போட்டிகளை நடத்த MP சு.வெங்கடேசன் முடிவு செய்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவானது இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு நேரம் போவதே கிடையாது. ஆகையால்,
அவர்களை வீட்டிற்குள் இருக்க செய்யும் விதத்திலும், அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் கலை இலக்கியப் போட்டிகளை நடத்த மதுரை எம்பி முடிவு செய்திருக்கிறார். அதன்படி, பங்கேற்கும் அனைவருக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான விதிமுறைகளும் வரையறுக்கப்பட்டு ஏப்ரல் 11-ம் தேதிக்குள் படைப்புகளை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.