கொரோனா தொற்றின் காரணமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம் மற்றும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சித்திரை பவுர்ணமி உற்சவம் விழா மற்றும் பௌர்ணமி கிரிவலம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கமான ஒன்று.
ஆனால் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி கொண்டிருப்பதனால் வரும் 26ம் தேதி அன்று சித்ரா பவுர்ணமி உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.