Categories
மதுரை மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மதுரை மாணவி ஐநாவின் நல்லெண்ண தூதராக நியமனம்!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மதுரை மாணவி ஐநாவின் நல்லெண்ண தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது வரை 27,256 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை அண்ணா நகரை சேர்த்த நபர் தான் தமிழகத்தில் முதல் முதலாக கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் முடி திருத்தும் தொழிலாளி மோகன் என்பவரின் மகளான நேத்ரா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

அப்பகுதி மக்கள் படும் இன்னல்களை பார்த்த அந்த மாணவி தனது எதிற்கான படிப்பிற்காக வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணத்தை எடுத்து அப்பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளான அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்துள்ளார். சுமார் 1,500 குடும்பங்களுக்கு மாணவ நேத்ரா உதவி செய்தார். இந்த தகவல் அறிந்த பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் மாணவி நேத்ராவை பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த இவரை கவுரவிக்கும் வகையில் ஐநாவின் நல்லெண்ண தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் முடி திருத்தும் தொழிலாளி மோகன் மகள் நேத்ராவுக்கு 1 லட்சம் ஊக்க தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜெனிவாவில் நடைபெறும் ஐநா மாநாட்டில் வறுமை தொடர்பாக பேசவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |