Categories
மாநில செய்திகள்

“மதுரை-கோவை” ரயில் நேரத்தில் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயில் சேவையின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 7.25 மணிக்கு மதுரையிலிருந்து புறப்படும் ரயில் மதியம் 12.45 மணிக்கு கோவையை சென்றடைகிறது. இந்த ரயிலின் வேகம் தற்போது அதிகரிக்கப்பட இருப்பதால் டிசம்பர் 25-ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து கிளம்பும் ரயில் கோவையை மதியம் 12:15 மணிக்கு சென்றடைந்து விடும். இதன் மூலம் 30 நிமிடம் பயண நேரம் குறையும்.

அதன் பிறகு இந்த ரயில் ஒட்டன்சத்திரத்துக்கு காலை 9:15 மணிக்கும், சத்திரப்பட்டிக்கு காலை 9.24 மணிக்கும், பழனிக்கு காலை 9:40 மணிக்கும், புஷ்பத்தூருக்கு காலை 8.53 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு காலை 10.1 மணிக்கும், மைவாடி ரோடுக்கு காலை 10.6 மணிக்கும், உடுமலைப்பேட்டைக்கு காலை 10.15 மணிக்கும், கோமங்கலத்துக்கு காலை 10.28 மணிக்கும், பொள்ளாச்சிக்கு காலை 10.53 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு காலை 11.5 மணிக்கும், போத்தனூர் காலை 11:30 மணிக்கும் சென்றடையும் நிலையில், புதிய கால அட்டவணையின் படி சற்று முன்னதாகவே ரயில் சென்றடையும்.

இந்நிலையில் கோயம்புத்தூரில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 7.35 மணிக்கு மதுரையை சென்றடையும். ஆனால் புதிய கால அட்டவணையின் படி கோயம்புத்தூரில் இருந்து ரயில் புறப்படும் நேரமானது 2.40 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் 35 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் மதுரையை சென்றடையும் நேரத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |