தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பல்லாவரம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மேடவாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், திரிசூலம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் பெருமாள்மலை, அட்டுவம்பட்டி, செண்பகனூர், சின்னபள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து.
மதுரை மாநகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒரு பெண் தவறி விழுந்தார். அந்தப் பெண் சுதாரித்துக்கொண்டு எழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.