நடிகர் ரஹ்மான் நடிப்பில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அதைத் தொடர்ந்து இவர் இயக்கிய ‘நரகாசூரன்’ திரைப்படம் வெளியாகவில்லை.
இதனிடையே தனது மூன்றாவது ப்ராஜெக்டாக கார்த்திக் நரேன் இயக்கியுள்ள திரைப்படம்தான் ‘மாஃபியா: சாப்டர் 1’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மாஃபியா படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாது படத்தின் டீசரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இயக்குநர் கார்த்திக் நரேனை பாராட்டியிருந்தார்.
இப்படி படம் குறித்து எல்லோரிடமும் நல்ல கருத்து நிலவி வந்த நிலையில் தற்போது இப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நரேனின் இரண்டாவது படமான நரகாசுரன் இன்னும் வெளியாகாத நிலையில் மூன்றாவது படம் ரீலிஸூக்கு தயாராக உள்ளது.
MAFIA – In cinemas from FEBRUARY 21 🎬❤️@LycaProductions @arunvijayno1 @Prasanna_actor pic.twitter.com/H1Eia77L21
— Karthick Naren (@karthicknaren_M) January 24, 2020