Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மகள் கண் எதிரே…. தாய்க்கு நடந்த துயரம்…. தர்மபுரியில் சோகம்….!!!

ஸ்கூட்டரில் நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் மீது டேங்கர் லாரி ஏறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரகூர் கிராமத்தில் சரவணன்-பூங்கோதை என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு ஷர்மிளா என்ற மகள் இருக்கின்றார். இதில் பூங்கோதை மார்டுக்கும் மற்றும் ஷர்மிளா இருவரும் இந்த கிராமத்திலிருந்து தர்மபுரி மாவட்டத்திலுள்ள காரிமங்கலம் நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரிமங்கலம் அகரம் பைபாஸ் சாலை அருகில் வந்தபோது திடீரென நிலை தடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர். அதே வேளையில் பின்னால் வந்த டேங்கர் லாரி பூங்கோதை, ஷர்மிளா மீது ஏறியது. இதனால் பூங்கோதை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து படுகாயமடைந்த ஷர்மிளாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூங்கோதையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |